முதன்முறையாக மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி , நாளை முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர், நாளை மறுநாள், அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பின்னர் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் இருநாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்
இதன்பின்னர் முதல் உலகப்போரில் எகிப்து நாட்டுக்காக போரிட்டு உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் எகிப்தில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடவுள்ளார்.
இதன் பிறகு பிரதமர் மோடி எகிப்து நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல்-ஹகீம் மசூதியை பார்வையிடுகிறார். இதன் பின்னர் முதல் உலகப் போரில் எகிப்துக்காகப் போரிட்டு உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின் எகிப்தில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடுகிறார்







