கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதோடு, நூலகம் மற்றும் கலைஞர் சிலையை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் துனை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.
இதனையும் படியுங்கள் : அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் பீகாரிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சிக்கு வருகின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூருக்கு மதியம் 3 மணியளவில் வருகை தர உள்ளனர். இதனையடுத்து காட்டூரில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.






