முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புக்கொண்டு பேசினார், அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மனதிற்குகந்த நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 69-ஆவது பிறந்த நாள் காண்கிறார். அவர் எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அவர் நீடு வாழ்க என தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை
இதேபோல, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் பாசத்துக்குரிய மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








