கோவையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பினை முன்னிட்டு மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடம் அணிந்து குழந்தைகளை வரவேற்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இரண்டு முறை கோடை விடுமுறை நீட்டிட்டு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடங்கிய நிலையில், கோவையில் மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடமடைந்தும் இனிப்புகள் வழங்கியும் குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பள்ளிக்கு செல்லும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு அடம் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைப்படங்களை கொண்டும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
– சே.அறிவுச்செல்வன்