சென்னை பல்லாவரத்தில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள நூர் மஹாலில் செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ்&சர்வீஸ் நல சங்கம், தமிழ் பொக்கிஷம் மற்றும் நியூஸ் 7 தமிழ் அன்புபாலம்
ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மொபைல் சேல்ஸ் & சர்வீஸ் நலச் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினா்.
பின்னா் சங்கரா நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கியதோடு கண் கண்ணாடி தேவைப்படுவோருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கினர்.
இந்த முகாமில் சுமார் 200 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருத்துவ ஆலோசனை பரிந்துரைக்கப்பட்டது.
ரூபி.காமராஜ்








