ஆரம்ப சுகாதார நிலையம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகத் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்த்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள்…

அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகத் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்த்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வருவதாகவும், வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்று 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஏற்கனவே செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பேரவையில் உறுதி வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.