முக்கியச் செய்திகள் Health

நீரிழிவு நோய் பாதிப்பு; முதல் 10 நாடுகளில் இந்தியா

டைப் 1 நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நவீனமான இன்றைய உலகில் பலரும் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களில் 84 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோய் அதிகம் பரவும் முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளதாகவும், ’தி லான்செட் நீரிழிவு மற்றும் எண்டோகிரைனாலஜி இதழ்’  நேற்று வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2040க்குள் டைப் 1 நீரிழிவு(T1D) நோய் பாதித்த மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சம் முதல் 1 கோடியே 74 லட்சம் வரை உயரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிரஹாம் ஓக்லே கூறுகையில், “2040ஆம் ஆண்டு டைப் 1 நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் 1 கோடியே 75 லட்சம் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது; எங்களது இந்த முடிவுகள் சமூகம் மற்றும் சுகாதார அமைப்புகள் சந்திக்கவிருக்கும் கணிசமான எதிர்மறை தாக்கம் குறித்த ஒரு எச்சரிக்கையை வழங்குகின்றன.

டைப் 1 நீரிழிவு நோய் மீது அதிக கவனம் செலுத்தி, அதன் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் எல்லா நாடுகளிலும் 100 சதவீதம் நோய் கண்டறிதலைச் செயல்படுத்தினால், வரும் பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என்று  கூறியுள்ளார்.

Diabetes

65 நாடுகளில் இருந்து குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மூத்தோரிடம் இருந்து T1D பரவல் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. இது தவிர, ஆராய்ச்சியாளர்கள் 2021ஆம் ஆண்டில் T1D நிகழ்வு, பரவல் மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கணிக்க 37 நாடுகளில் இருந்து இறப்பு தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.

2021ஆம் ஆண்டில் உலகளவில் 84 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயுடன் வாழ்வதாக அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 18 சதவீதம் பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள், 64 சதவீதம் பேர் 20-59 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 19 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

டைப் 1 நீரிழிவு நோய் (T1D) பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா, கனடா, சவுதி அரேபியா மற்றும் ஸ்பெயின் ஆகியவை அடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

T1D பாதிப்பு உடையவர்களில் 21 சதவீதம் பேர் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் வாழ்கின்றனர் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு T1D காரணமாக உலகளாவிய இறப்புகள் 1,75,000 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2040ஆம் ஆண்டில் T1D நோய் பாதிப்புடன் வாழும் மக்களின் எண்ணிக்கை 66 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

 

  • ஜெனி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிதி ஆயோக் கூட்டம்- மத்திய வரியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க முதலமைச்சர்கள் வலியுறுத்தல்

Web Editor

ரூ.96,000 மதிப்புள்ள ‘ஏசி’ ரூ.5,900க்கு விற்பனை; குவிந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்

3 வது டெஸ்ட்: ரோகித், புஜாரா அரைசதம், போராட்டத்தில் இந்திய அணி

Gayathri Venkatesan