நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதால், அவர் இன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு ‘பிங்க்’ நிற வாக்குச் சீட்டும் தரப்படும்.