பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை களம் காண்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று முர்மு வேட்புமனு தாக்கல் செய்ததுள்ளார். மனுவை மாநிலங்களவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரமோத் சந்திரமோடி பெற்றுக்கொண்டார்.
இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமையுடையவர்களாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தமாக 4,033 பேர் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவையின் 543 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 233 உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதியுடையோராவார்கள்.
தேர்தலில், எம்.பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200. எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231. மொத்தமாக 10,86,431 ஆகும். மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,893. அதாவது 48.67 சதவீத வாக்குகளை கைவசம் தேஜகூ தன்வசம் வைத்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பாஜகவின் வாக்கு மதிப்பு 4,56,582. அதாவது 42.26 சதவீதம். கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 22,601 வாக்கு மதிப்பையும், (2.09%) கொண்டுள்ளது. மற்றொரு கூட்டணியான அதிமுக 14,940 வாக்கு மதிப்புடன், 1.38 சதவீத வாக்குகளையும் கொண்டுள்ளது.
#WATCH NDA's Presidential election candidate Droupadi Murmu files her nomination in the presence of PM Modi, Union cabinet ministers & CMs of BJP & NDA ruled states pic.twitter.com/PkZDXeL3L1
— ANI (@ANI) June 24, 2022
அதேபோல, ஆம் ஆத்மி 21,802 வாக்கு மதிப்புடன், 2.02 வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் வாக்கு மதிப்பு 24,796, வாக்கு சதவீதம் 2.30, பிஜூ ஜனதா தளம் வாக்கு மதிப்பு 31,686, வாக்கு சதவீதம் 2.94, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 45,550 வாக்கு மதிப்புடன் , 4.22 சதவீதமாக உள்ளது.
இப்படியான சூழலில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 11.43 சதவீத வாக்குகளை வைத்துள்ள எந்த அணியிலும் சாராத இந்த 4 கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.