முக்கியச் செய்திகள்

மெட்ரிக் பள்ளிகளில் 69% இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட பாமக வலியுறுத்தல்

மெட்ரிக் பள்ளிகளில் 69% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட
வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூக நீதியை நிலைநாட்ட பள்ளிக் கல்வித் துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை!

ஊரகப் பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிஎஸ்கே வெற்றியை பாதித்ததா மின்வெட்டு?

Halley Karthik

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரை

Arivazhagan CM

30 ஆண்டுகள் கழித்து முதல் முறை வாக்களித்த ரஜினி ரசிகர்

Saravana Kumar