முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்கு சதவிகிதம்: ஓர் அலசல்

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான திரௌபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். அதேபோல பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை எதிர்க்கட்சி முன்னிறுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமையுடையவர்களாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தமாக 4,033 பேர் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவையின் 543 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 233 உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதியுடையோராவார்கள்.

தேர்தலில், எம்.பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200. எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231. மொத்தமாக 10,86,431 ஆகும். மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,893. அதாவது 48.67 சதவீத வாக்குகளை கைவசம் தேஜகூ தன்வசம் வைத்துள்ளது.

தனிப்பட்ட முறையில் பாஜகவின் வாக்கு மதிப்பு 4,56,582. அதாவது 42.26 சதவீதம். கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 22,601 வாக்கு மதிப்பையும், (2.09%) கொண்டுள்ளது. மற்றொரு கூட்டணியான அதிமுக 14,940 வாக்கு மதிப்புடன், 1.38 சதவீத வாக்குகளையும் கொண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 2,59,290 (24.02%) ஆக உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு மதிப்பு 1,47,184,13 (63%). திமுகவின் வாக்கு மதிப்பு 45,896 (4.25). சிவசேனாவின் வாக்கு மதிப்பு 25,200, வாக்கு சதவீதம் 2.34, தேசியவாத காங்கிரசின் வாக்கு மதிப்பு 16,219, வாக்கு சதவீதம் 1.50, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் வாக்கு மதிப்பு 6,680, வாக்கு சதவீதம் 2.30, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மொத்த வாக்கு மதிப்பு 58,632, வாக்கு சதவீதம் 5.43, சமாஜ்வாதி ஜனதா கட்சியின் வாக்கு மதிப்பு 27,769, 2.57 சதவீதம், ராஷ்டிரிய ஜனதா கட்சி வாக்கு மதிப்பு 17,676, வாக்கு சதவீதம் 1.64. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாக்கு மதிப்பு 16,686. வாக்கு சதவீதம் 1.5, இவற்றை கொண்டு பாரத்தால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு சற்றேறக்குறைய 40 சதவீத ஆதரவு உள்ளது.

அதேபோல, ஆம் ஆத்மி 21,802 வாக்கு மதிப்புடன், 2.02 வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் வாக்கு மதிப்பு 24,796, வாக்கு சதவீதம் 2.30, பிஜூ ஜனதா தளம் வாக்கு மதிப்பு 31,686, வாக்கு சதவீதம் 2.94, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 45,550 வாக்கு மதிப்புடன் , 4.22 சதவீதமாக உள்ளது.

இப்படியான சூழலில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 11.43 சதவீத வாக்குகளை வைத்துள்ள எந்த அணியிலும் சாராத இந்த 4 கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!

Jeba Arul Robinson

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்; சீமான் கண்டனம்

Halley Karthik

குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

எல்.ரேணுகாதேவி