அகமதாபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் பார்த் கொதேகர். முற்றிலும் காகிதம் கொண்டு பல கலை பொருட்கள் செய்து ஓர் காகித அருங்காட்சியகத்தையே படைத்திருக்கிறார். இவர் படைப்புகள் அனைத்தும் பார்ப்பவர்களை கண் கவரும் விதமாக அமைந்துள்ளது. பறவையின் இறக்கைகள், மலர்கள், மரங்கள், பட்டாம் பூச்சிகள், சினிமா கதாபாத்திரங்கள், மனித இதயம், உருவப்படங்கள் என இவரது படைப்புகள் நீண்டு கொண்டே போகிறது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “சிறுவயது முதல் காகிதங்கள் மீது அளவற்ற பற்று கொண்டேன். பொழுதுபோக்கிற்காக தொடங்கி தற்போது இதையே என் தொழிலாக மாற்றியுள்ளேன். நான் தினந்தோறும் காணும் காட்சிகளை காகிதத்தில் செதுக்குவேன். தற்போது காகிதக் கலைஞனாக உருவாகியுள்ளேன். மனநிறைவுடன் இத்தொழிலை செய்து வருகிறேன்” என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்