சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ம் தேதி நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று படத்தை திறந்து வைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று உருவப்படத்தை திறந்து வைப்பதாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இந்த விழாவானது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு வழக்கம்போல அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் செயல்பட்ட சட்டப்பேரவை 1921ம் ஆண்டு ஜனவரி 12 முதல் செயல்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.