முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மின்துறையில் ப்ரீபெய்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அன்பழகன்

புதுச்சேரி மக்களை பாதிக்கும் வகையில் மின்துறையில் கொண்டுவரவுள்ள ப்ரீபெய்டு
திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் அதிமுக
தலைமை அனுமதி பெற்று புதுச்சேரியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலங்கம் அதிமுகவை பற்றியோ அதிமுகவின் செயல்பாடுகளை பற்றியோ குறைத்து பேச எவ்விதமான தகுதியும் தார்மீக உரிமையும் இல்லை. அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை புதை குழியில் இருந்து தூக்கிவிடும் முயற்சியில் வைத்திலிங்கம் ஈடுபட வேண்டுமே தவிர மக்களுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட்டணியில் இருக்கும் போது தொடர்ந்து குரல் கொடுக்கும் அதிமுகவை பற்றி குறை கூற பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு எந்த அருகதையும் கிடையாது என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாக இருந்தாலும், மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் சோதனை மாநிலமாக புதுச்சேரியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பல விஷயங்களில் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை முதன் முதலில் அமல்படுத்தக்கூடிய மாநிலமாக புதுச்சேரியை தேர்ந்தெடுப்பது மாநில மக்களை அடிமைத்தனமாக நினைக்கும் செயலாகும்.
தனியார் பயன்படும் விதத்தில் அனுகூலமாக மக்களின் மீது பல்வேறு அடக்குமுறை திட்டங்கள் ஏவப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மின்கட்டணத்தை வசூல் செய்வதில் ப்ரீபெய்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அதற்கான ஒப்பந்தம் 2 தினங்களுக்கு முன்பு போடப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள 4.7 லட்சம் மின்விநியோக இணைப்பு ஸ்மார்ட் மீட்டர், எலக்டரானிக் மீட்டர், அனலாக் மீட்டரை 251 கோடி ரூபாய் செலவில் முழுமையாக மாற்றம் செய்து ப்ரீபெய்டு மீட்டராக மாற்றப்பட உள்ளது. மக்கள் மீது திணிக்கும் ஒப்பந்தத்தில் அரசு கையொப்பமிட்டிருப்பது தவறான ஒன்றாகும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள். முழுக்க முழுக்க மக்களுக்கு விரோதமான
திட்டம் இது என்றும், எனவே இந்த மக்களை பாதிக்கும் இந்த ப்ரீபெய்டு மின்சார திட்டத்தை முதலமைச்சரும், அரசும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது புதுச்சேரி அதிமுகவின் கோரிக்கை. இந்த திட்டத்தில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாய கூட்டத்தை கூட்ட முடிவெடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்று
மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே தமிழக மின்துறையில் மத்திய அரசால் சீர்திருத்தம் செய்ய முயன்றபோது மக்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் முழுமையாக எதிர்த்தார். எனவே புதுச்சேரியில் தொடர்ந்து இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துமேயானால் அதிமுக தலைமை மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று புதுச்சேரியில் அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’என் குடும்பம் கைவிட்டுவிட்டது’: உதவிக்கு ஏங்கும் ’ஸ்ரீகிருஷ்ணா’ நடிகர்!

Halley Karthik

இலங்கையில் 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

Halley Karthik

மேக்ஸ்வெல் விளாசல் வீண்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி

G SaravanaKumar