கர்ப்பிணிகள் புதிதாக பணிக்கு சேர தகுதியற்றவர்கள்; சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற எஸ்.பி.ஐ

3 மாதம் நிரம்பிய கர்ப்பிணிகள் பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சர்ச்சை அறிவிப்பை திரும்ப பெற்றது எஸ் பி ஐ. தேசிய அளவில் மிகப்பெரும்…

3 மாதம் நிரம்பிய கர்ப்பிணிகள் பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சர்ச்சை அறிவிப்பை திரும்ப பெற்றது எஸ் பி ஐ.

தேசிய அளவில் மிகப்பெரும் வங்கியாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ புதிதாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மூன்று மாதம் நிரம்பிய கர்ப்பிணிகள் புதிதாக பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என்ற சர்ச்சையான கருத்து இடம்பெற்றது. மேலும் குழந்தை பிறந்த 4 மாதங்களில் மீண்டும் அவர்கள் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்தனர். மேலும் இந்த அறிவிப்பு பெண்களுக்கு எதிரானது என்ற கருத்து சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசுபொருளானது.

 

இந்நிலையில் அறிவிப்புக்கு திமுக எம். பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இந்த அறிவிப்புக்கு தேசிய மகளிர் ஆணையம் தன்னுடைய எதிர்ப்பை நோட்டீஸ் அனுப்பி கண்டனத்தை பதிவு செய்தது.

https://twitter.com/SuVe4Madurai/status/1487287353203097602

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், எஸ். பி. ஐ யின் இந்த அறிவிப்பு பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/TheOfficialSBI/status/1487361039993917443

பல்வேறு தரப்பில் இந்த அறிவிப்பு கடுமையான கண்டனத்திற்கு உள்ளானதையடுத்து தாங்கள் வெளியிட்ட புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் “கொரோனா காலத்தில் அரசின் பரிந்துரையின் படி கர்ப்பிணிப் பெண்கள் Work From Home முறையில் வேலை செய்துவருகின்றனர். இந்த கொரோனா பரவலை கருத்தில் கொண்டே விதிமுறைகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்தோம். ஆனால் இந்த கருத்துக்கு பெரும்பானமையான மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், மக்களின் உணர்ச்சியை மதிப்பில் கொண்டும் புதிய விதிமுறைகள் திரும்பப்பெற்றுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.