அரசுப் பணிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – தமிழ்நாடு அரசு ஆணை!!

அரசுப் பணிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் வேலைவாய்ப்பகங்கள்…

அரசுப் பணிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், பெற்றோர்களை இழந்த இளைஞர்கள் மற்றும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு – மாதத்தின் முதல் நாளில் வணிகர்கள் ஷாக்!!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.