நலத்திட்ட உதவிகள் செய்த மக்கள் இயக்க நிர்வாகிகள் – கைப்பட கடிதம் எழுதி பாராட்டிய விஜய்!!

தன்னுடைய பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் கைப்பட எழுதிய கடிதம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான…

தன்னுடைய பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் கைப்பட எழுதிய கடிதம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது பிறந்தநாளை ஜூன் 22ம் தேதி கொண்டாடினார். திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். விஜய் தற்போது நடித்து வரும் “லியோ” திரைப்படத்திலிருந்து விஜயின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  “நா ரெடி” பாடல் வெளியிடப்பட்டது.

நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல், இலவச மதிய உணவு, இலவச ஆட்டோ பயணம், முதலானவற்றை மேற்கொண்டும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில், தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”கடந்த ஜூன் 22 அன்று, எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அறிந்தேன். உங்களின் இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  பிரியமுடன் விஜய்” என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஜூன் 17ம் தேதி, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி விஜய் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.