விவசாய நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய அவலம் – வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்!

நள்ளிரவில் விவசாய நிலத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரியின் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி, பாகலஹள்ளி ஊராட்சி கெங்களாபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனங்களை பொதுமக்கள்…

நள்ளிரவில் விவசாய நிலத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரியின் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி, பாகலஹள்ளி ஊராட்சி கெங்களாபுரம் பகுதியில் நேற்று
நள்ளிரவில் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.முன்னதாக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளைநான்கு டிப்பர் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு நல்லம்பள்ளி
அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியுள்ள வயல்வெளிகளில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.

கடுமையாக துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று பார்த்தபோது, நான்கு டிப்பர் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மருத்துவக்கழிவுகளை கொட்டிய வாகனங்களை சிறை பிடித்தனர்.

இப்பகுதியின் அருகிலேயே ஏரிகள், நீரோடைகள் கால்நடைகளின் மேச்சல் புறம்போக்கு நிலங்களும் விவசாய கிணறுகள் உள்ள நிலையில் மருத்துவக் கழிவுகளை அப்படியே விவசாய நிலத்தில் கொட்டினால் தண்ணீர் நச்சுத்தன்மை அடையும் என்பதும் மீண்டும் தற்போது கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த தொப்பூர் காவல் துறையினர், கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன உரிமையாளரிடம் தெரிவித்ததை அடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் மீண்டும் கழிவுகளை டிப்பர் வாகனங்களில் ஏற்றி மற்றொரு இடத்தில் கொண்டு சென்று கொட்டுவதற்காக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு ஒரு கணிசமான தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை முறையாக பயோமெட்ரிக் முறையில் அப்புறப்படுத்தாமல் விவசாய நிலங்களில் கொண்டு வந்து கொட்டி விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை நஞ்சாக்கும் நிலையை ஏற்படுத்து ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ஏற்கனவே இந்த வயல் வெளி பள்ளங்களில் இருபதிற்க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டு மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.