70% மானியத்தில் ஆலை: பிரதமர் மோடிக்கு பிரசாந்த் பூஷன் கேள்வி

குஜராத்தில் சிப் அசெம்பிளிங் ஆலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து  பிரதமர் மோடிக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க பயணத்தின் போது…

குஜராத்தில் சிப் அசெம்பிளிங் ஆலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து  பிரதமர் மோடிக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடி அதிக செலவு கொண்ட ட்ரோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதுமட்டுமின்றி குஜராத்தில் ஒரு சிப் அசெம்பிளிங் ஆலையை  அமைக்கும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செலவில் 70 சதவிகித மானியம் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

2.75 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் உருவாக்கப்படும் ஆலையில் வெறும் 0.825 பில்லியன் டாலர் மட்டும் முதலீடு செய்த மைக்ரான் 100 சதவிகித உரிமம் பெற்றிருக்கும். இதற்கு பெயர்தான் வளர்ச்சியா? என்று மோடிக்கு பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.