”பிரசித்திபெற்ற கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம்” – எப்படி பெறுவது..?

”பிரசித்திபெற்ற கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை கோயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதனை எப்படி பெற்றுக் கொள்வது விரிவாக காணலாம். கோயில், நம் அனைவரின் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்ககூடிய…

”பிரசித்திபெற்ற கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை கோயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதனை எப்படி பெற்றுக் கொள்வது விரிவாக காணலாம்.

கோயில், நம் அனைவரின் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்ககூடிய ஒரு அருட்தலமாகும், அந்த கோயிலில் கொடுக்கும் பிரசாதங்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை அளப்பரியது. அந்த பிரசாதம் நம்மிடம் இருக்கையில், அந்த கடவுளே நம்மிடம் இருப்பது போல் நாம் உணர்ந்து கொள்வோம்.

நேரமின்மை, நீண்ட தூரம் பயணம், நீண்ட வரிசை , கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் நம்மால் கோயிலுக்கு நேரடியாக சென்று வழிபடவோ பிரசாதம் பெறவோ இயலாமல் போகிறது. இதனை கவனத்தில் கொண்டு பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பிரசாதம் பெற்றுக் கொள்ளும் முறையை இந்து சமய அறநிலையத் துறை அறிமுகம் செய்துள்ளது.

அதன் படி தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கோயில்களில், பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து நம் வீட்டில் இருந்தபடியே எப்படி பிரசாதம் வாங்குவது என்பது குறித்து இந்த விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் வழி பிரசாதம் என்பது சமீபத்தில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு ஆன்மீக சேவையாகும்.  இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வமான http://www.tn.gov.in எனும் இணையதளத்திற்கு செல்லவும். இந்தப் பக்கத்தில்  இந்து சமய அறநிலையதுறையின் கீழ், இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் பட்டியல் இருக்கும்.

இந்தப் பக்கத்தின் வலதுபக்கத்தில் அஞ்சல் வழி பிரசாதம் எனும் ஒரு OPTION இருக்கும். அதை க்ளிக் செய்கையில், 49 கோயில்களின் அருள்மிகு பிரசாதங்களை அஞ்சல் வழி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை மையிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்ரணிய சுவாமி கோயில் உட்பட பல திருக்கோயில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் பிரசாதத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என பார்க்கலாம்.

முன்பதிவை க்ளிக் செய்யவும், பின்பு அஞ்சல் வழி பிரசாதம் 15 கிராம் என கொடுக்கப்பட்டுள்ளது. விபூதி 5 கிராம், குங்குமம் 5 கிராம், சுவாமி அம்பாளின் புகைப்படம் 5 கிராம் என மூன்றும் சேர்த்து 15 கிராம் என்ற கணக்கில் இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

வாங்குபவர்களின் பெயர், ஊர், அடையாள அட்டை உட்பட முக்கிய தகவல்களை பதிவிட்டு, இதற்கான கட்டணம் 30 ரூபாய் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு நபர் இரண்டு பிரசாதம் வரை வாங்கிக் கொள்ளலாம்..

PACKING கட்டணம், விநியோக கட்டணம், என மூன்றுத்துக்கும் சேர்த்து பணம் செலுத்துவது போல் இருக்கும். இது UPI, DEBIT அல்லது CREDIT CARD மூலமாக பணம் செலுத்தி ஆர்டர் செய்துகொள்ளலாம், CASH ON DELIVERY வசதி கிடையாது.

இது ஒவ்வொரு கோயில்களுக்கும் பிரசாதங்களின் எடை மற்றும் பிரசாதத்தில் இருக்கும் பொருட்களை பொருத்து பண மதிப்பு மாறும். அதன் பின்பு CAPTCHAவை சரிசெய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை டிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பித்த பின் ஆர்டரை உறுதிசெய்த பிறகு பதிவு செய்தவரின் பெயர் கைப்பேசி எண், மின்னஞ்சல், தொகை ஆகியவற்றை சரிசெய்து, make paymentஐ click செய்யவும். PAYMENTஐ வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ஒரு CONFIRMATION PAGE வரும், அதை சேமித்து வைத்து கொள்ளவும். வீட்டிலிருந்து கடவுளின் அருளை பெறவும்.

— ரா.ரேவந்த்மணி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.