விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அரசியல் என்பது சம்பாதிக்கக்கூடிய பதிவி கிடையாது மக்களுக்கு சேவை செய்யும் பதவி எனவும் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற விஜய், மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
அதிக இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளேன். இது போன்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்றுள்ளேன். ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததாக தோன்றுகிறது. வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்கிறேன் என்பது போல் உங்களை பார்க்கும் போது என் பள்ளிக்காலம் வந்து போகிறது.
படத்தின் கதை சொல்ல கேட்பதுண்டு, இப்போது வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். முடிந்தவரை படியுங்கள் அனைத்து தலைவர்களையும் கட்சிகளையும் தெரிந்து கொள்ளுங்கள் அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள்.காமராஜர் பற்றியும் படியுங்கள் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டு விடுங்கள். இது தான் இன்றைய செய்தி.
நடிகர் விஜயின் பேச்சு அரசியலில் நுழைவதற்கான ஆயத்தம் என கருத்து எழுந்த நிலையில் பல்வேறு கட்சியினர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள, பாஜக-வை சேர்ந்த எஸ்.வி.சேகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அரசியல் என்பது சம்பாதிக்கக்கூடிய பதிவி கிடையாது மக்களுக்கு சேவை செய்யும் பதவி எனவும் பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். மேலும் உள் கட்டமைப்பு வசதிகளை விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.






