சென்னை பல்லாவரம், சாய்பாபா கோயிலில் 200வது வாரமாக , நடிகர் பிரகாஷ்
ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வைத்து புத்தாடைகள் வழங்கினார்.
பல்லாவரம் திருவிக சாலையில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் வியாழகிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். இதில், தொடர்ந்து 200 வாரமாக நடிகர் பிரகாஷ் அன்னதானம் வழங்கினார்.
அதன்படி நேற்று 200 வது வாரத்தில் சாய்பாபா கோவில் சிறப்பு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், ஆயிரம் பேருக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் , ஏழை எளிய மக்களுக்கு சேலை, வேட்டி, துண்டு மற்றும் போர்வை
ஆகியவற்றையும் நடிகர் பிரகாஷ் வழங்கினார்.
—-கு.பாலமுருகன்








