சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.
“சமூக தாக்கத்திற்கான வணிகம் – நிலையான வளர்ச்சி இலக்குகள் மூலம் மாற்றத்தக்க மாற்றம்” என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இதை அடுத்து நடைபெற்று வரும் கருத்தரங்கின் மூலம் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் வணிகத்தை உருவாக்குவதற்காகவும், சமுதாயத்தில் உள்ள மக்கள் தனிபட்ட ஆசையினால் இயற்கை வளங்களை அளித்து வருவதாகவும் இதனை மாணவர்கள் இடத்தில் தெரியப்படுத்தும் விதமாக இக் கருத்தரங்கம் நடைபெற்று வருவதாக வணிகத் துறை தலைவர் மார்கஸ் தெரிவித்தார்.
மேலும் வணிக லாப நோக்கம் இருப்பதை மட்டும் கருதில் கொள்ளாமல் சமூதாய நோக்கத்துடன் எப்படி கையாள்வது என்பதை உணர்த்தும் விதமாக இக் கருத்தரங்கம் நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.
இதையடுத்து வணிகவியல் துறைச்சார்ந்த மாணவர்கள் சமுதாய நோக்கத்துடன் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். இதை தொடர்ந்து இக் கருத்தரங்கில் இந்திய முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் சமுதாய பற்றுடையவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
கோ. சிவசங்கரன்







