முக்கியச் செய்திகள் சினிமா

மகனுக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், தனது மகனுக்காக மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இப்போது தமிழில், அண்ணாத்த, எனிமி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் பிரகாஷ் ராஜ், இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை காதலித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர் களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அவர்கள், தங்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர்.

அப்போது தனது மகன் வேதாந்த் மற்றும் மகள்கள் முன்னிலையில், அவர்கள் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்துகொண்டனர். ’என் மகனுக்காக, நானும் போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்துகொண்டோம்’ என்று ட்விட்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பெருந்தொற்று பரவி ஒராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்த லட்சத்தீவு!

Saravana

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்

Gayathri Venkatesan

தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

Ezhilarasan