PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி!

கொடூர கொரோனா தொற்று உடலில் வேண்டுமானால் ஊடுருவலாம். ஆனால் அன்பு மனங்களை அதனால் பிரிக்க முடியாது என்பதை ஒரு இளம் ஜோடி.உண்மையாக்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ரட்லம் நகரரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு…

கொடூர கொரோனா தொற்று உடலில் வேண்டுமானால் ஊடுருவலாம். ஆனால் அன்பு மனங்களை அதனால் பிரிக்க முடியாது என்பதை ஒரு இளம் ஜோடி.
உண்மையாக்கி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ரட்லம் நகரரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் மணமக்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திருமணத்தை தள்ளி வைப்பதா என்று உறவினர்கள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், கவச உடையுடன் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு இளம் உள்ளங்களின் திருமணம், கொரோன கவச உடையுடன் இனிதே நடந்தேறியது. இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு, கவச உடையணிந்த புரோகிதர் திருமண சடங்குகளைச் செய்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.