’இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்’ – ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்த நாடு  அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் இன்று  இந்தோனேசியா பகுதியில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தோனேசியாவின் மேற்கு பபுவா இந்தோனேசியா பகுதியை மையமாகக் கொண்டு இன்று மதியம் 1.54 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. 39 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தோனேசியாவில் கடந்த 7-ம் தேதி 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.