முக்கியச் செய்திகள் தமிழகம்

சீண்டி சீண்டி விளையாடும் சீமானும், அமைச்சர் செந்தில் பாலாஜியும்… களைகட்டும் ’பவர்’ பாலிடிக்ஸ்

தமிழ்நாட்டில் ஆட்சி வந்து ஓராண்டு ஆனதை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் ஒன்றை டுவிட்டியுள்ளார்.

அதில், ‘ஏப்பா சீமான்..  இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு  சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அதுதான் பெரியம்மா திராவிட மாடல்…!’ என நக்கல் அடித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக களத்தில் இறங்கினார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு ‘உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன் என  பதிலுக்கு சீமானை சீண்டினார்.

இது நெட்டிசன்களுக்கு விருந்தாக மாறிவிட்டது. இரு தலைவர்களின் டுவிட்டர் போருக்குள் திராவிட சித்தாந்தவாதிகளும்,  தமிழ் தேசியவாதிகளும் களத்தில் குதித்துவிட்டனர். மனிதம் பழகு என்ற ஐடியை வைத்திருப்பவர், அண்ணன் 2.5 லட்சம் மாத வாடகை கொடுக்க காசு இருக்கு…ஒரு இன்வெர்டர் வாங்க காசு இல்லையா… வரலாற்று துயரம் உறவே என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ந கனகராசு என்பவர் இன்வெர்டர் வைக்க அவசியம் இல்லாதவாறு தடையற்ற மின்சாரம் குடுக்குறதுதான் சிறந்த நிர்வாகம் உபி.. இதுல விடியலன்னு பீத்தல் வேற என காட்டமாக பதில் கூறியுள்ளார்.

தமிழ் ராஜா என்பவர் ஒரு படி மேலேபோய், தமிழ் தேசிய தலைவர்கள் வாழ்வதற்கு பெயர் சொகுசு பங்களாவாம்..!? திராவிட தலைவர்கள் வாழ்வது வாடகை குடிசை வீடாம். ஹய் நல்லாருக்கே உங்கள் திராவிட மாடல் என நக்கல் அடித்துள்ளார்.

கிருட்டிணன் என்பவர் அண்ணன் சீமான் சொகுசு பங்களாவில் வாழ்கிறார். இந்த ஸ்டாலின், உதயநிதி எல்லாம் குடிசையில்தான் வாழ்ந்து மக்கள் சேவை செய்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் எனக் கேட்டுள்ளார்.

இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் நெட்டிசன்கள் களத்தில் குதித்தனர். சபரிநாதன் என்பவர், ‘அண்ணன் வீட்ல மின்வெட்டா வரலாற்றுல இது எவ்வளோ பெரிய துயரம். ஈழ உறவுகளை பணத்தை கோடிகளில் லட்சங்களில் அனுப்புங்க அண்ணன் வீட்டிற்கு தனியா மின்உற்பத்தி நிலையத்தை கட்டுவோம் என நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

சீமான் தொடங்கி வைத்த டுவிட்டர் போரில் சேதாரம் என்னவோ இரு தரப்புக்கும் சற்று அதிகம்தான் என்றாலும், இதில் குளிர் காய்வதோ வலதுசாரிகள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ ’பவர்’ பாலிடிக்ஸ் நெட்டிசன்களுக்கு இனிய விருந்து என்பதில் மட்டும் மாற்று கருத்தில்லை.

இராமானுஜம்.கி

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவிற்குள் உள்ள சின்னச்சின்ன பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு வெற்றிக்காக பணியாற்ற வேண்டும்! – ஓபிஎஸ்

Saravana

தீப்பெட்டி தொழிலைக் காக்க வேண்டும்; சசிகலா அறிக்கை

Halley Karthik

பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!

Jayapriya