முக்கியச் செய்திகள் செய்திகள்

டெல்லியை துவம்சம் செய்த சென்னை!

 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை துவம்சம் செய்தது சென்னை அணி.

ஐபிஎல் தொடரின் நவிமும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோதின. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஜடோஜா நேற்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்குப் பதிலான ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல, பிராவோவும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, சென்னை அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கிய கான்வே, ருத்துராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். கான்வே அரை சத்தைத் தாண்டினார். ருத்துராஜ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த கான்வே 87 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.

பேட்டிங் ஆர்டரில் எக்கச்சக்கமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு முந்தைய ஆட்டங்களில் உத்தப்பா மற்றும் மொயிந் அலி ஒன் டவுனில் இறங்கி வந்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் அடித்து ஆடும் மனநிலையில் இருந்த சென்னை தூபேவை ஒன் டவுனில் இறக்கியது. துபே 19 பாலில் 32 ரன்கள் எடுத்து சிறு கேமியோ ஆடி ஆட்டமிழந்தார். அடுத்து அம்பத்தி ராயுடு களமிறங்கி  5 ரன்கள் எடுத்து வெளியேற சர்ப்ரைஸாக தல தோனி களத்தில் இறங்கினார். அவரும் 8 பந்துகளில் 21 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தகது சென்னை அணி. ஆனால், பனிப்பொழிவு மற்றும் சென்னை அணியின் சுமாரான பவுலிங் காரணமாக இந்த ஸ்கோரை டெல்லி எளிதில் சேஸ் செய்துவிடும் என்றே கூறப்பட்டது.

தனது முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் ஓப்பனரை அவுட்டாக்கினர் சிமர்ஜீத் சிங். கடந்த சில போட்டிகளாக டெல்லி அணிக்கு கைகொடுத்து வரும் டேவிட் வார்னரை தீக்ஷனா அவுட்டாக்கினார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் மார்ஷ் மற்றும் கேப்டன் பண்ட் பவர் பிளேயில் அடித்து ஆடினர். மொயின் அலி ஓவரில் மார்ஷ் மற்றும் ரிபேல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். அந்த ஓவரில் இருந்து போட்டி சென்னை அணி பக்கம் திரும்பியது. மொயின் அலி சிறப்பாகப் பந்து வீசி ரிஷப் பண்டையும் கிளீன் போல்ட் ஆக்கினார். மிகவும் அபாயமான வீரர் என்று கருதப்பட்ட ரோமன் பவுலை முகேஷ் சவுத்ரி அவுட்டாக்கினார். இதனால், டெல்லி அணி 117 ரன்களில் ஆல் அவுட்டாகியது.

சென்னை தரப்பில் மொயின் அலி 3 விக்கெட்டுகள், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், பிராவோ 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 8 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  இது இந்த சீசனின் மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக ஆடிய கான்வே ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் கடினமாகி உள்ளது. அதேநேரத்தில் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளதா என்று கால்குலேட்டரும் சகிதமாகக் காத்திருக்கின்றனர் சென்னை அணி ரசிகர்கள்.

இதுகுறித்துப் பேசிய கேப்டன் தோனி, நெட் ரன் ரேட் குறித்து நாங்கள் எப்போதும் சிந்திக்க மாட்டோம். ஐபிஎல்ஐ அனுபவித்து விளையாட வேண்டும். இப்போதைக்கு விளையாடப்போகும் அனைத்துப் போட்டிகளிலும் கவனம் செலுத்த விரும்புகிறோம் என்றவர் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து பேசும்போது நான் பள்ளியில் இருந்தே கணக்கில் அந்த அளவுக்கு சிறப்பு கிடையாது. நாங்கள் பிளே ஆஃப்க்கு சென்றால் நல்லதுதான். அதேநேரத்தில் நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாவிட்டால் உலகம் நின்றுவிடப்போவதில்லை என்று தனக்கே உரிய ஸ்டைலில் பஞ்ச் கொடுத்தார்.

 

 

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் இதுவரை 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Halley Karthik

மத்திய அரசை எதிர்க்க வேண்டாம் – முதலமைச்சருக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

Ezhilarasan

அரசியல்வாதிகளை கண்காணிக்கும் ‘பெகசஸ்’ செயலி

Vandhana