முக்கியச் செய்திகள் தமிழகம்

அமெரிக்கா தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

லண்டனில் தி ரைஸ் எழுமின் எட்டாம் உலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது, ஜூலை மாதம் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்க திட்டம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

எட்டாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டன் மாநகரில் நடைபெற்றது. இதில், 60க்கும் மேலான உலக நாடுகளில் இருந்து தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 5,6,7 ஆகிய நாட்களில் நடைபெற்ற இந்த மாநாட்டை, தி ரைஸ் எழுமின் அமைப்பு ஏறபாடு செய்திருந்தது. இதில், அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி ஜாம்பியா, ஜிம்பாப்வே, நைஜீரியா, மெக்சிகோ, துருக்கி – குர்திஸ்தான், ஈராக் போன்ற தமிழர்கள் சிறிய எண்ணிக்கையில் வாழும் நாடுகளிலிருந்தும் பங்கேற்றார்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் கணினித் தொழில்த் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாட்டில் முதலீடு செய்ய விருப்பமுள்ள தொழிலதிபர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார். ஒற்றைச் சாளர முறையில் தடையற்ற வழிவகைகளை செய்து கொடுத்தால் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்வதற்கு அமெரிக்காவில் நண்பன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இயங்கி வரும் நண்பன் தொழில் வணிகக்குழுமம் முன்வந்திருக்கிறது.

 

வருகின்ற ஜூலை மாதம் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதற்கும், அவருடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் 50 தொழிலதிபர்களை இணைத்து பேரவையில் ஒருங்கிணைக்க லண்டன் மாநாடு திட்டம் போட்டுள்ளது.

 

மேலும் ATDXT என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் தரவு காப்பு டேட்டா சென்டர் உருவாக்க 20 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அமைச்சர் தங்கராஜ் முன்னிலையில் அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் ஜி எஸ் மூர்த்தி அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக உலகெங்கும் உள்ள தமிழ் IT துறை தொழிலதிபர்கள் திறனாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை தமிழ் உலகெங்கும் 21 ஆம் நூற்றாண்டு கணினி துறை வளர்ச்சியில் பங்குபெற செய்வதற்காக ‘ஆற்றல்’ என்கின்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும் லண்டன் மாநாடு அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Halley Karthik

200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்!

Halley Karthik

ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் சாலை மறியல்!