2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் நீடித்த மின்தடை.…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் நீடித்த மின்தடை. இரவிலும் தொடர்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமமுற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கருங்குளம், சேரகுளம், ராமானுஜம்புதூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் மின்வெட்டு நிலவியதால், அப்பகுதி கிராமங்கள் இருளில் மூழ்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் படவேடு விண்ணமங்கலம் முள்ளண்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், காணை, பிடாகம், சிறுவந்தாடு பனையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.