லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக,…

உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக, அவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராம் கிருபால், விவசாயியின் கோரிக்கையை நிறைவேற்ற 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என்று கேட்கிறார்.

இதையும் படியுங்கள் : வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

அதற்கு விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு தான் கொடுக்க முடியும் என்று பதில் சொல்கிறார். கடைசியாக 3 கிலோ உருளை கிழங்கு கொடுப்பதாக இருவரும்  பேசியுள்ளனர். விசாரணையில், “உருளைக்கிழங்கு” என்ற வார்த்தை லஞ்ச பணத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “விவசாயியிடம் உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்கும் போலீஸ்” என்று சமூகவலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த ஆடியோ காவல்துறை வட்டாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உதவி ஆய்வாளர்  ராம் கிரிபால் சிங்கை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியிலான விசாரணை நடத்த கன்னோஜ் எஸ்பி அமித் குமார் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.