இன்பநிதி பாசறை பெயரில் போஸ்டர்கள் – திமுகவிலிருந்து 2பேர் நீக்கம்..!

புதுக்கோட்டை நகர பகுதிகள் முழுவதும் எதிர்காலமே என்கின்ற வாசகங்களுடன் விரைவில் துவங்குகிறது இன்பநிதி பாசறை என தமிழக  விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் புகைப்படத்துடன்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரத்தில் திமுகவிலிருந்து இருவர்…

புதுக்கோட்டை நகர பகுதிகள் முழுவதும் எதிர்காலமே என்கின்ற வாசகங்களுடன்
விரைவில் துவங்குகிறது இன்பநிதி பாசறை என தமிழக  விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் புகைப்படத்துடன்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரத்தில் திமுகவிலிருந்து இருவர் நீக்கப்பட்டனர்.

திமுக கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் உதயநிதி
ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் கட்சிக்கு வந்தாலும் அவர்களையும் நாங்கள்
வரவேற்போம் என பல்வேறு கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அமைச்சர்கள் பேசி வந்தனர்.

இந்த  நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிகளில்  திமுகவினர் விரைவில் உதயமாகிறது இன்பநிதி பாசறை என்கின்ற சுவரொட்டி நகரம் முழுவதும் இன்று அச்சடித்து ஒட்டப்பட்டது. அந்த சுவரொட்டியில் எதிர்காலமே என வாசகம் இடம்பெற்று அதில்  இன்பநிதியின் படத்தை போட்டு விரைவில் உதயமாகிறது என எழுதப்பட்டிருந்தது. இந்த  சுவரொட்டியால் புதுக்கோட்டை நகர பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக புதுக்கோட்டையைச்
சேர்ந்த திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் ஆகியோர் தற்காலிகமாக
நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.