மத்திய காவல் படையான இந்தோ திபெத் போலீஸ் படையில் முதன்முறையாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், இந்தோ திபெத் போலீஸ் படை, என்எஸ்ஜி மற்றும் எஸ்எஸ்பி உள்ளிட்டவை மத்திய காவல் படையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தோ திபெத் போலீஸ் படையை தவிர்த்து இதர படைகளில் பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். இதனையடுத்து 2016 முதல் இப்படையில் பெண்கள் இணைக்கப்பட்டனர். ஆனால் போர் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது உதவி கமண்டட் பணியில் பிரக்ரிதி, தீக் ஷா ஆகியோர் முதன் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Saluting the daughter with pride…
Diksha joined ITBP as Assistant Commandant. His father Insp/CM Kamlesh Kumar of ITBP salutes her after the Passing Out Parade and attestation ceremony at ITBP Academy, Mussoorie today. #Himveers pic.twitter.com/v8e1GkQJYH
— ITBP (@ITBP_official) August 8, 2021
இவர்களுக்கான பயிற்சி முடிவடைந்ததையடுத்து தற்போது படையில் சேர்ந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மற்றவர்களுடன் இணைந்து இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். இதில் பிரக்ரிதி மின் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







