பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.  டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 

டிடிஎஃப் வாசன் கடந்த செப். 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவா் கைது செய்யப்பட்டார். அவா் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காயத்துக்கு சிறை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இளைஞா்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரா், தனது யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரித்துவிட்டு வரும்படி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்தார். அதாவது 6.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்று முறை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்த நிலையில் இன்று காவல் முடிவடையும் நிலையில் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி இனியா கருணாகரன் நவம்பர் 9ஆம் தேதி வரை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

நான்காவது முறையாக இந்த காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது அதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.