#Suriya44 | படப்பிடிப்பை நிறைவு செய்தார் பூஜா ஹெக்டே – படக்குழு தகவல்!

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, விஜய் நடிப்பில்…

actress pooja, suriya 44

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளார்.

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சூர்யாவின் 44-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

இதையும் படியுங்கள் : கொளத்தூர் அருகே உள்ள கிராமங்களில் உலா வரும் #leopard | வனத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

இதையடுத்து, இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.