பாலியல் வன்கொடுமை புகார் – #Malayalam நடிகர் எடவேல பாபு ஜாமினில் விடுவிப்பு!

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக மலையாள நடிகர் எடவேல பாபு கைதாகி, ஜாமினில் வெளிவந்தார். மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா கமிட்டி, கடந்த மாதம்…

Sexual assault complaint - Malayalam actor Edavela Babu released on bail!

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக மலையாள நடிகர் எடவேல பாபு கைதாகி, ஜாமினில் வெளிவந்தார்.

மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா கமிட்டி, கடந்த மாதம் அந்த அறிக்கையை வெளியிட்டது. இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, இந்திய திரையுலகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகைகள் பலரும், தாங்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கொச்சி நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் மலையாள நடிகர் எடவேல பாபு மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் போலீசார் இன்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். கொச்சி கடலோர போலீஸ் தலைமையகத்தில் 3 மணி நேர நீண்ட விசாரணைக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்தது.

இவர் முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவர் வெளிவந்துள்ளார். பாபு மீது புகார் அளித்த நடிகையே, நடிகர் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்ல ராஜூ, வக்கீல் சந்திரசேகரன் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் நோபிள் மற்றம் விச்சு ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.