முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’நமக்கு கொரோனா வரலையேன்னு நினைச்சேன், ஆனா…’ பிரபல நடிகை திடுக் வீடியோ

வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தனக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூஜா பேடி. பல படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் கபீர் பேடியின் மகள். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனக்கு ஏன் இதுவரை கொரோனா வரவில்லை என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன். இப்போது எனக்கும் கொரோனா  வந்துவிட்டது. பாசிட்டிவ் என சோதனையில் தெரிய வந்துள்ளது.

வீட்டில் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட தூசி அலர்ஜியாக இருக்கும் என்று முதலில் விட்டு விட்டேன். பிறகு இருமல் அதிகரித்து மோசமடைந்தது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். கொரோனாவேதான். நான் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி வருவதற்கு முன்பே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99% பேர் பிழைத்திருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய 99% பேரும் பிழைத்திருக்கிறார்கள். இதன் மூலம் நமக்கு தேவை எச்சரிக்கைதான். பீதியல்ல. நாம் பயப்படவும் தேவையில்லை.

நான் என்னுடைய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புகிறேன். அது என்னை மீட்க உதவும். இது என் தனிப்பட்ட முடிவு. ஒவ்வொருவரும், தங்கள் சொந்த தேர்வுகளை மேற்கொள்ளுங்கள். ஆவி பிடித்தல் உள்ளிட்ட முறைகளை நான் பின்பற்றி வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்!

Halley Karthik

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Halley Karthik

தமிழர்களை சீண்டிப் பார்த்தால், முதலமைச்சர் இப்படித்தான் நடந்துகொள்வார்: திமுக கனிமொழி

Web Editor