பொன்னியின் செல்வன் படம் அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கல்கியின் பிரமாண்டமான ’பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக்கி வரு கிறார். இந்த படம் 2 பாகங்களாக தயாராகி வருகிறது. படத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கொரோனா ஊரடங்கால் தடைபட்ட படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு பின் பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சமீபத்தில் தங்களுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்து படம் அடுத்தாண்டு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.







