முக்கியச் செய்திகள் சினிமா

2022-ம் ஆண்டு தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன்

2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது. 
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு,  இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள பொன்னியின் செல்வன் வெளியான நாள் முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் வரலாற்றுப் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.
முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் பலர் முயற்சி செய்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.450 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முந்தைய  தமிழ்ப் படங்களின் வசூலைப் பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.
கமலின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 430 கோடி வசூல் செய்திருந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வசூலைப் பொன்னியின் செல்வன் முந்தியுள்ளது. மேலும் 2022ல் வெளியான தமிழ்ப்  படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்-பாகிஸ்தான் வெற்றி

Web Editor

30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு முதல் ஜாமீன்; உச்சநீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar

வாட்ஸ்அப்பில் உங்கள் போட்டோவை ஸ்டிக்கராக மாற்றுவது எப்படி?

EZHILARASAN D