நாளை வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ’இளையோர் சூடார்’ பாடல்!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘இளையோர் சூடார்’ பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில்,…

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘இளையோர் சூடார்’ பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில், உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படமாகும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வIlaiyorSoodaarசூலித்து பெரும் சாதனை படைத்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி களமிறங்கியது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். இந்த படம் 10 நாட்களிலேயே ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை கடந்தது.

இதையும் படியுங்கள் : தீபாவளிக்கு வெளியாகிறது ’ஜிகர்தண்டா 2’ – படக்குழு அறிவிப்பு… ரசிகர்கள் குஷி..!

லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்த படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள ’இளையோர் சூடார்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் அகநக, சின்னஞ்சிறு நிலவே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.