முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வெளியானது பொன்னியின் செல்வனின் ”போர் வீரனா சொல்” பாடல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் ”போர் வீரனா சொல்” பாடல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாக உள்ளது.  பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், , சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இந்த திரைபடத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி பல ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த நிலையில் திரைப்படத்தின் அடுத்த பாடலான போர் வீரனா சொல்.. லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த பாடலை ரக்ஷிதா சுரேஷ் , ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலை கிரித்திகா நெல்சன் எழுதியுள்ளார். திரிஷா மற்றும் சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அ.மாரித்தங்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

Arivazhagan Chinnasamy

அஜித்தும் விநாயகர் சென்டிமெண்டும்….

G SaravanaKumar

சென்னை: முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி செப்.1-ம் தேதி வரை நீட்டிப்பு

Dinesh A