நான் காட்டுப் பசியில் இருக்கிறேன் – நடிகர் சிம்பு

என்னுடைய காட்டு பசிக்கு தீணி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்துள்ள…

என்னுடைய காட்டு பசிக்கு தீணி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழகம் முழுவதும் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வியாழன் கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் சிம்பு -கவுதம் மேனன் கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பு இருக்கும். இவர்கள் இருவரும் முன்னதாக விண்ணைத் தாண்டிவருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் இணைந்து வெற்றியை கொடுத்த நிலையில், இந்த வரிசையில் இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் பெரும் வரவேற்பை பெற்றுது.

படம் வெளியான பிறகு நேர்காணல் ஒன்றில் சிம்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ” நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால், திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது, இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீணி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.