முக்கியச் செய்திகள் சினிமா

ரூ.400 கோடி வசூலை எட்டியது ‘பொன்னியின் செல்வன்’

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சுவைமிக்க விருந்தாக அமைந்துள்ள பொன்னியின் செல்வன் வெளியான நாள் முதல் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் வரலாற்றுப் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் 3 நாட்களுக்குள் ரூ.230 கோடி வசூல் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 2022ஆம் ஆண்டு வெளிவந்த பான் இந்தியா படங்களான கே.ஜி.எஃப் பாகம் 2 உலக அளவில் 1200 கோடியும், RRR உலக அளவில் 1150 கோடியும், விக்ரம் திரைப்படம் உலக அளவில் 430 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலக அலவில் ரூ.400 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுப்பதால் கூடுதல் வசூல் செய்து, விரைவில் விக்ரம் படத்தின் வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

3வது டி20 போட்டி : இந்தியா அபார வெற்றி

Halley Karthik

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

Hamsa

ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!

Web Editor