“சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் ரூ.1,766 கோடி வருவாய்”

சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 19.132 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளப்பட்டு ரூ.1,766 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில்…

சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 19.132
மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளப்பட்டு ரூ.1,766 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக
தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022 – 23 ஆம் ஆண்டிற்கான நடப்பு அரையாண்டில் இதுவரை 19.132 மில்லியன் டன் சரக்குகள் அதாவது நிலக்கரி, உணவுப் பொருட்கள், சிமெண்ட் மற்றும் பல்வேறு இயந்திரப் பொருட்கள் இதுவரை கையாளப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக கடந்த 6 மாதத்தில் 1,766 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாகவும்
கடந்த ஆண்டை விட 34.92% அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் சென்ற மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக நிலக்கரியில் 0.25 மெட்ரிக் டன்,
உணவு தானியங்களில் 0.12 மெட்ரிக் டன் மற்றும் மற்ற பொருட்களில் 0.1 மெட்ரிக்
டன் பொருட்கள் என கையாளப்பட்டுள்ளதாகவும் கொரோனா காலத்திற்குப் பிறகு சரக்குகளை கையாளுவது தென்னக ரயில்வே ஒரு சீறிய வளர்ச்சி எட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.