பொன்னேரி நகராட்சி அடுத்த காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்கம்பங்களை அகற்றாமல், புதிய தார்சாலையை சாலை ஒப்பந்ததாரர்கள் அமைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின் கம்பங்களை அகற்றாமல் சாலை ஒப்பந்ததாரர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தார் சாலைகளை அமைத்துள்ளனர். இதனைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட தார்சாலையால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அசிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் முறையாக மின்கம்பங்களை அகற்றி, விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பணிகளை முறையாக செய்யாத அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
– கோ. சிவசங்கரன்







