பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா!

பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணியாற்றின் கரையில்…

பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணியாற்றின் கரையில் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி தாயார் உடனுறை ஹரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலை சோழ மன்னன் கரிகாலன் கட்டியதாக வரலாறு. கரிகாலன் கட்டியதால் இக்கோயிலுக்கு ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் என்று பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இங்குள்ள புற்றில் இருந்து ஹரிகிருஷ்ண மூலவர் தோன்றியதாகவும், பெயருக்கு ஏற்றார் போல் இக்கோயில் அமைந்துள்ள இடத்தை திருஆயர்பாடி என்றே அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரம்மோற்சவ விழாவானது இக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான  சித்திரை விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பின்னா் முக்கிய விழாவாக வரும் 8 ஆம் தேதி நள்ளிரவு ஹரிஹரன் சந்திப்பு விழாவும் 10 ஆம் தேதி தேர் திருவிழாவும் 13 ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. மேலும் கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஹாிகிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர்.

—ரூபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.