பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன் முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி நிதி ஒதுக்கியும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் தொகுப்பு பொருட்களான ரூ.1000 ரொக்கப்பணம், அரிசி, சா்க்கரை, முழுநீளக்கரும்பு ஆகிவற்றை பெறுவதற்கான டோக்கன்கள் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. இந்த பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை ஆகியன ஏற்கெனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பு மேலூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் தொடங்கப்படுகிறது. வரும் 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.