2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து, 2022 ஜனவரி, 11ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேருந்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மா.போ.க பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ), தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து 2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
2022 ஜனவரி, 11ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 2022 ஜனவரி 16-18ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து கொள்ள www.tnstc.in, tnstc official app, http://www.redbus.in, http://www.paytm.com மற்றும் http://www.busindia.com போன்ற இனையதளங்களை பயன்படுத்திக்ககொள்ளலாம்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி
எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என போக்குவரத்துத்துறை தனது அறிப்பில் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டியில், “
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது, வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்களில்(சாலையோர உணவகங்கள்) மோசமான உணவு குறித்து புகார் எழுந்தால் அந்த கடைகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்படும்.”என்று தெரிவித்துள்ளார்.








