தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் படத்திற்காக கிடைத்த ஆஸ்கர் விருதினை யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதியினரிடம் அப்படக்குழுவினர் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி
பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு
குட்டி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகி கொன்சால்வஸ் என்ற பெண் பொம்மன், அவரது மனைவி பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகள் இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் படம் தயாரித்து அப்படத்திற்கு தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என பெயரிட்டு யூடியூப் மற்றும் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தின் மூலம் வெளியிட்டனர்.
இந்த படம் சிறந்த ஆவணகுறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. கடந்த 13ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 9வது ஆஸ்கர் விருது விழாவில் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றம் அப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து அந்த படத்தின் படக்குழுவினர் யானையை பராமரித்து வரும் தம்பதிகளாக பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து ஆஸ்கர் விருதை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.







