அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்

அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,  “கமல்…

அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,  “கமல் ரத்த தான அமைப்பு” துவக்க விழா சென்னை  ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது கமல் ஹாசன் பேசியதாவது:

நல்லதொரு கூட்டத்தில் சேர்ந்து விட்டீர்கள் என்று பெருமை உங்களுக்கு இருக்க வேண்டும். சிறையில் இருந்தால் மட்டும் தலைவர் இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான். விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாட நான் இங்கு வரவில்லை. அது ஒரு படி. என் திரைப்படங்களில் அரசியலும், சமூக அக்கறை சார்ந்த அம்சங்களும் தொடர்ந்து இடம்பெறும். நம்மவர் என்பது நான் மட்டுமே இல்லை நீங்களும் தான்.

உண்மையில் நடப்பவை பற்றி தான், நான் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பாடலில் எழுதி இருந்தேன். நான் ஒன்றியம் என்று சாடியுள்ளது ஒரு கட்சியை மட்டுமில்லை. அனைத்து ஒன்றியத்தையும் தான். ஒரு ஏழையை பணக்காரனாக்கும் வியாபாரம் அல்ல அரசியல்; ஏழையே இல்லாமல் ஆக்குவதே அரசியல். எனக்கு வள்ளல் பட்டம் தேவையில்லை.

என்னைவிட அரசியலை சிறப்பாக யாராலும் செய்துவிட முடியாது. அவர்களிடம் மேடை மட்டுமே உள்ளது. என்னிடம் தான் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த அரசியல் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் தொழில் தொடரும். செலவு செய்யும் பணத்தை எல்லாம் வருமான வரித் துறைக்கு கணக்கு காண்பித்து விடுகிறேன். இதை வைத்து என்னை யாரும் மிரட்ட முடியாது என்று கமல் ஹாசன் பேசினார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.